×

தஞ்சை ரயில் நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய 6 பைக்குகள் பறிமுதல்

தஞ்சை, டிச.1: தஞ்சை ரயில் நிலையம் முன்பு பயணிகள் வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் அனுமதிக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தாமல் அனுமதிக்கப்படாத பகுதிகளில் நிறுத்தி செல்கின்றனர்.இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு மற்ற வாகனங்களை நிறுத்துவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பயணிகள் மற்றும் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் எஸ்ஐக்கள் வெங்கடாசலம், மணிவண்ணன் மற்றும் போலீசார் ரயில் நிலையம் முன்பு அதிரடி சோதனை நடத்தினர். இதில் அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தி இருந்த 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரித்தனர். அதன் பின்னர் அவர்களிடம் பைக்குகளை உரிமையாளர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

Tags : railway station ,Tanjore ,
× RELATED 476 கிலோ குட்கா பறிமுதல்