×

முககவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்

பாபநாசம்,டிச.1: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பாபநாசம் காவல்துறை சார்பில் முக கவசம் அணியாதவர்களுக்கு நேற்றுமுன்தினம் அபராதம் விதிக்கப் பட்டது. கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 15 பேருக்கு தலா ரூ 200 வீதம் அபராதம் விதிக்கப் பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் விஜயா உள்பட போலீசார் பங்கேற்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி