×

தஞ்சை அருகே டெக்கரேசன் நிறுவன உரிமையாளர் மர்மச்சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு

தஞ்சை, டிச. 1: தஞ்சை அருகே டெக்கரேசன் நிறுவன உரிமையாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை வாங்க உறவினர்கள்  மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு நாடார் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (45). யாகப்பா நகரில் அலங்காரம் செய்யும் டெக்கரேசன் நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி வித்யா (35). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில் தஞ்சை பகுதியை சேர்ந்த 43 வயது பெண்ணுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் 7 ஆண்டுகளாக பழகி வந்தனர். இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தொழில் விருத்திக்காக மணிகண்டன் அதிகளவில் கடன் வாங்கியிருந்தார்.நேற்று முன்தினம் அந் தபெண்ணின் வீட்டுக்கு சென்ற மணிகண்டன் அங்கு மாடியில் உள்ள அறையில் தூக்கில் மர்மமான முறையில் தொங்கினார். இந்த தகவல அறிந்ததும் அங்கு சென்ற அவரது மனைவி வித்யா கதறினார். பின்னர் தஞ்சை தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதில் கணவர் சாவுக்கு அந்த பெண்தான் காரணம், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்ஸ்டர் தர் மற்றும் போலீசார், மர்மச்சாவு என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை மணிகண்டனின் சடலத்தை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள் மறுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து நேற்று சடலத்தை உறவினர்கள் வாங்கி சென்றனர்.

Tags : relatives ,
× RELATED வாகனம் மோதி பலியான மாணவர் சடலத்துடன் உறவினர்கள் மறியல்