×

உரம் தெளிப்பு மும்முரம் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 100 இடங்களில் சாலை, ரயில் மறியல்

திருவாரூர், டிச.1: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 5ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அதன் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பது, அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒன்றரை கோடி விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவிப்பது, 100 நாள் வேலைத் திட்டத்தினை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்தினருக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 5ம் தேதி காலை 8 முதல் மாலை 5 மணிவரை 100 இடங்களில் கட்சியின் சார்பில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு பொதுமக்களும் விவசாயிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு சிவபுண்ணியம் தெரிவித்துள்ளார்.

Tags : Road ,rail blockade ,places ,government ,
× RELATED திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் நாளை...