×

வேளாண் விற்பனை கூடங்களில் தேங்காய் கொப்பரை விற்பனை செய்யலாம் விவசாயிகளுக்கு அழைப்பு

திருவாரூர், டிச.1:திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைக் கூடங்களில் தென்னை விவசாயிகள் தங்களது தேங்காய் கொப்பரையினை விற்பனை செய்யலாம் என ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயலாளர் சரசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர், வலங்கைமான், குடவாசல் மற்றும் பூந்தோட்டம் ஆகிய 7 இடங்களில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த விற்பனைக் கூடங்களில் விவசாயிகளின் விளை பொருள்கள் மறைமுக ஏலம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது தென்னை விவசாயிகள் தங்களது தேங்காய் கொப்பரையினை இந்த வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிடங்குகளில் இருப்பு வைத்து மறைமுக ஏலம் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம்.வ்வாறு செயலாளர் சரசு தெரிவித்துள்ளார்.


Tags : stalls ,
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக