×

மருந்தாளுனர் சங்கம் வலியுறுத்தல் வாகனங்களுக்கு ஒளிரும் பட்டை, வேக கட்டுப்பாடு கருவி பொருத்த கடும் நிபந்தனை லாரி உரிமையாளர் சங்கம் ஆர்டிஓவிடம் கோரிக்கை

திருவாரூர், டிச.1: திருவாரூர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் பாண்டியன், பொருளாளர் முருகேசன் மற்றும் பொறுப்பாளர்கள் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக லாரிகள் இயங்காததால் அதன் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விண்ணை முட்டும் டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு தொகை உயர்வு போன்றவை உயர்ந்துள்ள நிலையில் அதற்கு ஏற்ப சரக்கு லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் காலாண்டு வரி, வாகன காப்பீடு போன்றவற்றை உடனே செலுத்துமாறு அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகா, ஒரிசா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் காலாண்டு வரி கட்டுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒளிரும் பட்டை மற்றும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதும் நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் தமிழகத்தில் உடனே ஒளிரும் பட்டை மற்றும் வேக கட்டுப்பாடு கருவி களை பொருத்திவிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒளிரும் பட்டையானது ஏற்கனவே ரூ1,200 முதல் ரூ1,500 வரையில் பொருத்தப்பட்ட நிலையில் குறிப்பிட்ட 2 நிறுவனங்களில் மட்டும்தான் பொருத்த வேண்டும் என்று தற்போது அரசு தெரிவித்துள்ளதையடுத்து அந்த நிறுவனமானது ரூ 6,000 முதல் ரூ 8,000 வரை கட்டணமாக வசூல் செய்கிறது. இதேபோன்று ஜிபிஎஸ் கருவி எனப்படும் வேக கட்டுப்பாட்டு கருவியானது ஏற்கனவே ரூ.3,000 முதல் ரூ.4,000 என்ற அளவில் பொருத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட 8 நிறுவனங்களில் மட்டும் தான் பொருத்த வேண்டும் என்று அரசு உத்தரவுக்கு ஏற்ப அந்த நிறுவனங்கள் ரூ 15 ஆயிரம் முதல் ரூ20 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்கின்றன. எனவே இந்த குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டும்தான் பொருத்த வேண்டும் என்ற உத்தரவினை மாற்றி எந்த நிறுவனங்களில் வேண்டுமானாலும் பொறுத்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு வழங்க வேண்டும் என்பதுடன் காலாண்டு வரி, வாகன காப்பீடு போன்றவற்றிற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.



Tags : Pharmacists 'Association Insists on Truck Owners' Association RTO ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு