×

ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர், துப்புரவாளர் வேலைக்கு விண்ணப்பம் பெற காலக்கெடு நீட்டிப்பு

திருவாரூர்,டிச.1:ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் வேலைக்கான விண்ணப்பங்கள் பெற்றிட காலக்கெடு நீட்டிப்பு திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 22 சமையலர் பணியிடங்கள் (15,700-50,000) என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15,700 ஊதியம் மற்றும் 6 தொகுப்பூதிய துப்புரவாளர் பணியிடங்கள் (மாத தொகுப்பூதியம் ரூ.3,000) ஆகிய பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பித்திட கடைசி நாளாக வரும் 3ம்தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக தகுதியான நபர்கள் தங்களது விண் ணப்பங்களை உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு அனுப்பிட வழங்கிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் விண்ணப்பங்களை பெற்று வழங்கிட கடைசி தேதி 7.12.2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும், விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தகுதியான நபர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.தகுதியான நபர்கள், திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்திட வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Adithravidar Welfare Department ,
× RELATED உலக வங்கி கெடு முடிந்தநிலையில் அணைகள் புனரமைக்க கால அவகாசம் நீட்டிப்பு