×

வேலூர் மத்திய சிறையில் 8வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர், டிச. 1: வேலூர் மத்திய சிறையில் 8வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கோர்ட் அனுமதியுடன் 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து பேசி வந்தனர். தற்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி முதல் முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 8வது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதற்கிடையில் உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்த முருகன், அதே பிரிவில் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று சிறைத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முருகன் உண்ணாவிரதம் தொடர்பாக எந்தவித கடிதத்தையும் சிறை நிர்வாகத்திடம் அளிக்கவில்லை. எனவே, அவர் உண்ணாவிரதம் இருப்பதாக நாங்கள் கருத முடியாது. இருப்பினும் முருகனின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றனர்.ஆனால், முருகன் உண்ணாவிரதம் இருப்பதற்கான காரணத்தை தெரிவிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Tags : Murugan ,Vellore Central Jail ,
× RELATED சிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்