×

சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக நிர்வாக வசதிக்காகவும்-கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், புதியதாக அமையப் பெற்ற சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக மயிலை த.வேலு அறிவிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து, சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்களாக செல்வி சௌந்தரராஜன், கே.எஸ்.மணி (எ) வெல்டிங் மணி, என்.அன்பழகன், மாம்பலம் ஆ.சந்திரசேகர், அ.வாசுதேவன், ச.வேலு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளருடன் இணைந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. துரைமுருகன் வெளியிட்டுள்ள மற்ெறாரு அறிவிப்பில், “ மயிலாப்பூர் கிழக்கு பகுதி பொறுப்பாளராக எஸ்.முரளி நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Southwest District ,DMK ,committee members ,
× RELATED திமுக பிரமுகர் அண்ணனை கொல்ல முயன்ற...