×

ஓகி புயல் நினைவு திருப்பலி

நாகர்கோவில், நவ.30: நாகர்கோவில், கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஓகி புயல் நினைவு சிறப்பு திருப்பலி பங்குதந்தை எட்வின் தலைமையில் நடந்தது. ஊர் தலைவர் ஜெயம், மீன் தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் அந்தோணி, அன்பிய ஒருங்கிணைப்பாளர் அந்தோணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ஓகி புயலின் போது உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓகி புயலில் சிக்கி பலியான 172 மீனவர்களுக்கு அஞ்சலி  செலுத்தும் வகையில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில்  குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் விசைப்படகில் கடல் வீரர் தினம் வீர  வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
படகில் வைக்கப்பட்டிருந்த  மீனவர்களின் உருவ படங்களுக்கு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர்  சர்ச்சில் தலைமையில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மற்றும் மலர் தூவி  அஞ்சலி செலுத்தினர்.தெற்காசிய மீனவர் தோழமை குளச்சல் கிளை செயலாளர்  ஆரோக்கிய ராஜ், மீனவர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சார்லஸ்,குமரி மாவட்ட  விசைப்படகு ஓட்டுனர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரெக்சன், துறைமுக  ஏலக்காரர்கள் வியாபாரிகள் சங்க இணை செயலாளர் ஜின்சிலின்,அ.தி.மு.க.மீனவர்  அணி ஆன்றோ ஜாக்சன் உள்பட பலியான மீனவர்களின் உறவினர்கள் பலர் கலந்து  கொண்டனர்.

Tags : Oki ,
× RELATED தமிழகத்தில் கரையை கடக்கும் புரெவி புயல்: ஒகி புயலை விட வலுவானதா?