×

நெற்பயிரில் குலநோய் தாக்குதல் தீவிரம்

தொண்டி, நவ.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானிலை மேக மூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற் பயிரில் குலைநோய் மற்றும் நெற்பழ நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. நெற்பயிரில் இளம்பயிர் தொடங்கி அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரைத் தாக்குகிறது. இலைகளின் மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப் பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவப் புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். இந்நோய் தீவிரமாக தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலை நோய் எனப்படுகிறது.

இந்த குலை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நோயற்ற பயிரிலிருந்து விதைத் தேர்வு செய்ய வேண்டும். வயலிலும் வரப்பிலும் உள்ள களைகளை அகற்றிட வேண்டும். நெற்பயிரினைத் தாக்கும் பழ நோய் நெற் கதிர் மற்றும் மணிகளைத் தாக்கிச் சேதம் விளைவிக்கிறது. பழநோயினால் பாதிப்படைந்த வயல்களில் அறுவடைக்குப் பின் வைக்கோல் மற்றும் தாள்களை அழித்துவிட வேண்டும். நெற் பயிரில் குலை நோய் மற்றும் பழ நோய் தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் பகுதி வேளாண் மையங்களை அணுகி விவசாயிகள் ஆலோசனை பெறலாம்.

Tags : attack ,
× RELATED பள்ளிகளில் தூய்மைப்பணி தீவிரம்