×

அன்னதானம் வழங்கல்

ஆர்.எஸ்.மங்கலம், நவ.30: தேவிபட்டினத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இல்ல மாணவர்களுக்கு த.ம.முக தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக, நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தேவிப்பட்டிணம் காந்தி நகர் அருகேயுள்ள அரசு மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் காலை சிற்றுண்டி மற்றும் மதியம் பிரியாணி உள்ளிட்டவற்றை ஒன்றிய தலைவர் மாரிதாஸ் தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்ட இணைச் செயலாளர் முனியசாமி, மாவட்ட பொருளாளர் சரவணபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் முகவை செல்வா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ₹42 லட்சம்