×

உயர்ந்து வரும் கத்தரி விலை மகிழ்ச்சியில் விவசாயிகள்

இளையான்குடி, நவ.30: கார்த்திகை மாத விழாக்களை முன்னிட்டு, இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் கத்தரிக்காய், மற்றும் மல்லிகை பூ விலை உச்சத்தை தொட்டது. இளையான்குடி பகுதியில் முனைவென்றி, குறிச்சி, குமாரகுறிச்சி, அரியாண்டிபுரம், சாலைக்கிராமம், வடக்கு சாலைக்கிராமம், பிச்சங்குறிச்சி, சமுத்திரம் ஆகிய கிராமங்களில் தோட்டப் பயிரான கத்தரி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ கத்தரி விலை ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இடி, மின்னல் மற்றும் தொடர் மழை காரணமாக கத்தரியில் பூ பூப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் கத்தரிகாய் இறங்குவதில் மந்தநிலை ஏற்பட்டு, வரத்து குறைந்ததால் விலை உச்சத்தை தொட்டது. நேற்று இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் ஒரு கிலோ கத்தரி விலை ரூ.120க்கு விற்பனையானது. அதுபோல தேனி, திண்டுக்கல், பாம்பன் பகுதியில் விளையும் மல்லிகை, மதுரை மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருவதால், நேற்று நிலவரப்படி நூறு மல்லிகை விலை ரூ.100க்கு விற்பனையானது. அதனால் மல்லிகை மற்றும் கத்தரி விலை உயர்வால் உற்பத்தி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ