பொன்னை அருகே ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி விளையாடும் சிறுவர்கள்

பொன்னை, நவ. 30: பொன்னை அருகே ஆபத்தை உணராமல் அணைக்கட்டு ஆற்றில் இறங்கி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் விளையாடுகின்றனர். காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நிகர் புயல் காரணமாக இப்பகுதியில் பெய்த மழையால் கடந்த 4 நாட்களாக பொன்னை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், மேலும் செல்பி பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புகைப்படம் எடுக்க தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பொன்னை அடுத்த அணைக்கட்டு பகுதியில் செல்லும் ஆற்று நீரை காண குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் அறிவித்த அபாய எச்சரிக்கையை மீறி செல்பி எடுத்தும் ஆபத்தை உணராமல் விளையாடியும் வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: