×

திமுக பிரமுகர் கொலை குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது

திண்டுக்கல், நவ.30: திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே கடந்த அக்.22ம் தேதி திமுக பிரமுகர் சின்னப்பன் திவ்யராஜ் என்ற அருண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார், ஜார்ஜ்(32), சபரி காந்தன்(29), பிரான்ஸிஸ்(36), செல்வகுமார்(23) ஆகிய நான்கு பேரை ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய கருப்பசாமி(24), விக்னு (எ) விக்னேஷ்(26), ஸ்டாலின் (எ) ஸ்டாலின் ஜோசப்(35), பாலசந்தர்(22) ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : DMK ,
× RELATED தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கைக்...