×

மாற்றுத்திறனாளிகள் 16ம் தேதி மறியல்

பழநி, நவ.30:    பழநியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். பழநி நகரச் செயலாளர் தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், காளீஸ்வரன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார். பழநி நகர், ஒன்றியம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பழநிக்கு என ஒதுக்கப்பட்ட மனநல காப்பகத்தை இடமாற்றம் செய்ததைத் கண்டித்து வரும் 16ம் தேதி மறியல் போராட்டம் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார்துறை வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags :
× RELATED 16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்