×

இடையகோட்டையில் சந்தன உருஸ் விழா நிறைவு

ஒட்டன்சத்திரம், நவ.30: ஒட்டன்சத்திரம், இடையகோட்டையில், குத்புல் அக்தாப் கௌதுல் அலம் முஹைய்யிதீன் அப்துல் காதர் ஜீலானி ஆண்டவர்களின் தாபூத்தென்னும் 3 நாள் சந்தன உருஸ் விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25ம் தேதி வாசனை மாலையுடன் தர்கா இரவ்லா ஷரீபின் போர்வை ஊர்வலம் நடந்தது. 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களில் சந்தன உருஸ் ஊர்வலம் நடைபெற்றது. நேற்று   காலை சந்தனம் வழங்குதல் நடைபெற்றது. நேற்று மாலை ஹத்தமல் குர்ஆன் நிறைவுக்குப் பின்னர் புனிதக்கொடி இறக்குதல் நடைபெற்றது. மூன்று நாட்களும் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி மற்றும் கண்கவர் வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Sandalwood Urus Festival ,Idayakottai ,
× RELATED நத்தத்தில் சந்தன உரூஸ் விழா