×

கார்த்திகையை முன்னிட்டு மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து அமைப்பினர் கைது

 திண்டுக்கல், நவ.30: திண்டுக்கல் மலைக்கோட்டையில் கார்த்திகையை முன்னிட்டு தீபமேற்ற முயன்ற இந்து மக்கள் கட்சி மற்றும்  இந்து அமைப்பினர் சுமார் 70க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க திண்டுக்கல் மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கோவிலில் நேற்று  திருக்கார்த்திகையை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமையில் 75க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கிளம்பி அபிராமி அம்மன் கோயில் முன்பு தீப வழிபாடு செய்தனர். பின்னர் தீப விளக்கை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் ஏற்ற சென்றனர். மலைக்கோட்டைக்கு செல்ல முயன்ற 70க்கும்  மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : activists ,hill fort ,Karthika ,
× RELATED அனைத்து வகை எடை போடுவதிலும்...