×

ஆத்தூர் ஒன்றியத்தில் திமுகவில் இணைந்த பாஜ.வினர்

சின்னாளபட்டி, நவ.30: அய்யம்பாளையம் பேரூர் தேமுதிக, பாஜக, அமமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலையில் அய்யம்பாளையத்தை சேர்ந்த தேமுதிக மாவட்ட பிரதிநிதி கண்ணன், பாஜக மாற்றுத்திறனாளி அமைப்பை சேர்ந்த அய்யம்பெருமாள், அமமுகவை சேர்ந்த கணேசன் உட்பட பலர் அக்கட்சிகளில் இருந்து விலகி  திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், அய்யம்பாளையம் பேரூர் கழக செயலாளர் அய்யப்பன், தங்கராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : BJP ,DMK ,Attur Union ,
× RELATED தமிழக மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி