×

தமிழகம் மீட்போம் திமுக சார்பில் தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டம்

திருப்பூர், நவ. 30: தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் 2021 சட்ட மன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் காணொலி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தில் 250 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சாமிநாதன், திமுக துணைப்பொதுச்செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். தொடர்ந்து திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. தெற்கு மாவட்டத்தில் 194 பேர், மத்திய மாவட்டத்தில் 100 பேர், கிழக்கு மாவட்டத்தில் 98 பேர், வடக்கு மாவட்டத்தில் 67 பேர் என மொத்தம் 459 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.பின்னர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் காணொலி மூலம் பேசினார்.  

இக்கூட்டத்தில் தெற்கு தொகுதி பொறுப்பாளர் நாகராசன், வடக்கு தொகுதி பொறுப்பாளர் தினேஷ்குமார், தொமுச துணை தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, வடக்கு மாவட்ட இளைரணி அமைப்பாளர் தங்கராஜ், இளைரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் ராமதாஸ், மாநகர பொறுப்பு குழு உறுப்பினர் செந்தூர் முத்து, முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன் குமார், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மேங்கோ பழனிசாமி, மாநகர பொருப்பு குழு உறுப்பினர் சலீம், திமுக நிர்வாகி குளோபல் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதே போல திருமுருகன் பூண்டியில் காணொலி முலம் நடைபெற்ற கூட்டத்திற்கு பழனிசாமி தலைமை வகித்தார். லோகு முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காங்கயம் : திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட காங்கயம் தொகுதியில் 26 இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சாமிநாதன், திமுக சுற்றுபுற சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் பேசினர். இதில் திமுக மூத்த நிர்வாகிகள் 459 பேருக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டது.  இதில் காங்கயம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம், காங்கயம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அப்புக்குட்டி, வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, வெள்ளகோவில் நகர செயலாளர் முத்துக்குமார், காங்கயம் நகர செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Tamil Nadu ,election ,meeting ,Redemption DMK ,
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த ரூ.621 கோடி...