×

கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் மாற்று கட்சியினர் இணைந்தனர்

உடுமலை, நவ. 30:  அதிமுகவின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் எம்.பி. மகேந்திரன் பகுதி வாரியாக கட்சியினரை சந்தித்து வருகிறார். அதன்படி சங்கராமநல்லூர் பேரூராட்சி குப்பம்பாளையம் பகுதியில் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அமமுக, மதிமுக உள்ளிட்ட மாற்று காட்சியை ்சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
குப்பம்பாளையம் சுப்பிரமணியம் தலைமையில் 35க்கும் மேற்பட்ட அமமுகவினரும், புதுநகரம் ஜோதிக்கண்ணு தலைமையில் 15க்கும் மேற்பட்ட மதிமுகவினரும் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வின்போது அதிமுக சங்கராமநல்லூர் பேரூர் கழக செயலாளர் அன்னதான பிரபு, நிர்வாகிகள் செல்வராஜ், பாலு, கொழுமம் சக்கரபாணி, வக்கீல் ராமகிருஷ்ணன், பள்ளபாளையம் போகநாதன், சிவக்குமார், சிவலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Alternative parties ,AIADMK ,Eastern District ,
× RELATED மாற்று கட்சியினர் பாஜவில் இணைந்தனர்