சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் திருச்சி ஐயப்பன் கோயில் நெய் அபிஷேகத்தில் பங்கேற்கலாம்

திருச்சி, நவ.30: திருச்சி ஐயப்ப சங்கம் செயலாளர் வெள்ளாந்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கொரோனா ஊரடங்கு காரணமாக சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்று நெய் அபிஷேகம் செய்ய இயலாத பக்தர்கள் திருச்சி கன்டோன்மென்ட் கோர்ட் அருகே அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு வந்து நெய் அபிஷேகத்துக்கு கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம். காலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை தரிசன நேரமாகும். இருமுடியிலிருந்து சேகரித்த நெய்யும், தனியாக பக்தர்கள் கொடுக்கும் நெய்யும் பகவான் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து நெய் பிரசாதமாக வழங்கப்படும். அரசாங்கம் அறிவித்துள்ள வழிகாட்டுதலைப் பின்பற்றி பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முக கவசம் அணிதலும் அவசியம். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள செல்ல முடியாது. நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: