×

மார்லிமந்து அணையில் போதிய அளவு நீர் இருப்பு

ஊட்டி, நவ.30: ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான மார்லிமந்து அணையில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 50 நாட்கள் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர் நிலைகள் நிரம்பின. இேதபோல் ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களான பார்சன்ஸ்ேவலி அணை, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.
கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு தூர்வாரி சீரமைக்கப்பட்ட மார்லிமந்து அணையிலும் நீர்மட்டம் உயர்ந்தது.

அதன்பின் வடகிழக்கு பருவமழை துவங்கிய போதும், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் மார்லிமந்து அணையில் சற்று நீர்மட்டம் குறைந்துள்ளது. இருப்பினும் தற்போதைக்கு போதுமான அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 23 அடியில் தற்போது 15 அடி வரை நீர் இருப்பு உள்ளது. இனிவரும் நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Marlimandu Dam ,
× RELATED வடகிழக்கு பருவமழையால் மார்லிமந்து அணையில் தண்ணீர் அளவு உயர்வு