×

20 ஆண்டுகளாக ஊதியமின்றி பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் கோயில் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல்

மன்னார்குடி, நவ. 30: தமிழ்நாடு கோயில் பூசாரிகள் சங்க மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கை: பூசாரிகளுக்கு மாத ஊதியம் பணிப் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோயில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் 2019ல் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதன் பேரில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒருகால பூஜை மற்றும் இலாகா கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலில் சேராத திருக்கோவிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம், பணிப்பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் 2019 மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் மாத ஊதியம், பணி பாதுகாப்பு, பொங்கல் கருணை கொடை உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆணையர் இக்கோரிக்கையினை ஏற்று விரைவில் நடைமுறை படுத்துவதாக தெரிவித்த நிலையில், 8.11.2019ம் தேதி இலாகா கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் ஒருகால பூஜை நடைபெறும் திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரி களுக்கு அடையாள அட்டை மட்டும் வழங்க உத்தரவிட்டார்.

இது பூசாரிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழக முதல்வர் 24.3.2020 தேதியில் சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் 31.07.2019 வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து பணி நிறைவு செய்த தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை கணக்கில் கொண்டு காலமுறை ஊதியம் வழங்கியும் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக் கோயில்களில் பட்டியலில் சேராத திருக்கோயில் மற்றும் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் மாத ஊதியம் பணிபாதுகாப்பு இல்லாமல் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் கோயில்களில் பணியாற்றி வரும் சுமார் 20 ஆயிரம் பூசாரிகள் அர்ச்சகர்கள் மீது தமிழக அரசும் ஆணையரும் எந்த அக்கறையும் செலுத்தவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை அனுசரித்து சுமார் 20 ஆண்டுகளாக மாத ஊதியமே இல்லாமல் இப்பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : priests ,Temple Priests' Association ,
× RELATED உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் காயம்!