×

கல்லாதவர்களுக்கு கற்போம் எழுதுவோம் கையேடு வழங்கல்

திருத்துறைப்பூண்டி, நவ. 30: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எழுத்தறிவு ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு புதிதாக கற்போம் எழுதுவோம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் முதற்கட்டமாக கருத்தாளர் பயிற்சி முடிவுற்றது. மேலும் இதன் தொடர்ச்சியாக கல்லாதவர்கள் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 26 மையங்கள் கண்டறியப்பட்டு அந்த மையங்களின் தன்னார்வலர்களும், கல்லாதவர்களுக்கும் உரிய பயிற்சி ஏடு முத்துப்பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா தலைமையில் பயிற்சி கட்டகங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுநர் சக்தி விநாயகம், சிறப்பாசிரியர்கள் சங்கர், கன்னியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தேரிகுடியிருப்பு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்