தியாகராஜர் கோயிலில் சொக்கப்பனை கொரோனா நிவாரணம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், நவ. 30: கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.ஆயிரம் கிடைக்காத மாற்றுத் திறனாளி கள் நவ.10க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 16,512 மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசின் கொரோனா நிவாரண தொகையாக தலா ரூ.ஆயிரம் பெற்றுள்ளனர். எனவே இதுவரை கொரோனா நிவாரண தொகை கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் வரும் 10.12.2020க்குள் தாங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தலைமையிடத்து துணை தாசில்தால், மண்டல துணை தாசில்தார் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 9499933494 என்ற அலைபேசி எண் மற்றும் 04366-290513 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொண்டு நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை அளித்து கொரோனா நிவாரண தொகையான ரூ.ஆயிரத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: