மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி தஞ்சையில் பைக்குகளில் நூதன மணல் திருட்டு தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை

தஞ்சை, நவ.30:தஞ்சையில் பைக்குகளில் நூதன மணல் திருட்டு.நடைபெறுகிறது.இதனை போலீசார் கண்டுகொள்வதில்லை. தஞ்சையிலுள்ள வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கரைகளில் சில மாதங்கள் முன்பு மணல் திருட்டு ஜரூராக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் எஸ்பியாக தேஸ்முக்சேகர் சஞ்சய் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு காவல் சரகத்தில் எஸ்ஐ தலைமையில் தனிப்படை அமைத்து, மணல் திருட்டை தடுத்தார்.அதன் பின்னர் சில மாதங்களாக மணல் திருட்டு முற்றிலும் ஒழிந்தது. இதன் தொடர்ச்சியாக மாட்டுவண்டி வைத்திருந்தவர்கள் அதை விற்று விவசாய தொழிலில் ஈடுபட தொடங்கினர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக, தஞ்சை வெண்ணாற்றில்நூதன முறையில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.இந்த நூதன திருட்டில் ஈடுபடுபவர்கள், பைக்குகளில் சாக்கு மூட்டையில் மணல்களை ஏற்றி ஒரு மூட்டை ரூ. 200 என விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் சிலர் பழைய சொகுசு கார்களை விலைக்கு வாங்கி அதில் உள்ள சீட்டுகளை அகற்றிவிட்டு, அதில் மணல் மூட்டைகளை வைத்து இரவு, பகல் நேரங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

வெண்ணாற்றில் இருந்து பைக்குகளில் மணல் திருடுபவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 5 மூட்டைகள் வைத்துக் கொண்டு அதிக வேகமாக செல்வதால் சாலையில் செல்வோர், பைக்கில் முன்புறம், எதிரே வருபவர்கள், வேகத்தில் செல்வதால், அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் குறித்த அவர்களை தட்டி கேட்டால், தகராறு செய்ததால் அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விடுகின்றனர். பட்டப்பகலில் வெண்ணாற்றிலிருந்து பைக்குகளில் நூதன முறையில் மணல் திருட்டு கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.எனவே மாவட்ட காவல்துறை தஞ்சை வெண்ணாற்றில் நூதன முறையில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: