தஞ்சையில் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு 2 வது நாளாக சான்றிதழ் சரிபார்ப்பு

தஞ்சை,நவ.30: தஞ்சை மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஊர்க்காவல் படையில் 440 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு தஞ்சைஆயுதப்படை மைதானத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது.இதில் 1,700 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு நீளம் தாண்டுதல், ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதே போல் ஓட்டம், நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் ஆகிய போட்டிகளுக்கும் தனித்தனியாக மதிப்பெண் வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்ற 99 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 13 பேர் பெண்கள் ஆவர். 2வது நாளான நேற்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில்முதல்நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 99 பேர் பங்கேற்றனர். இவர்களது கல்வி சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. இவற்றில் தேர்வு செய்யப்படும் 50 பேருக்கு காவல் துறை மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் டிஎஸ்பிக்கள் பாரதிராஜன், சம்பத்பாலன், இன்ஸ்பெக்டர் சந்திரா, எஸ்ஐ கோகிலா, ஊர்க்காவல் படை சரக துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: