×

அனுமதியின்றி மது விற்ற ஒருவர் கைது

கறம்பக்குடி, நவ.30: கறம்பக்குடியில் அனுமதியின்றி மதுபானம் விற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி செட்டித்தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). இவர் அனுமதியின்றி மதுபானம் விற்பதாக கறம்பக்குடி காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து எஸ்.ஐ. அன்பழகன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விஸ்வநாதன் என்பவர் தென்னகர் செக்போஸ்ட் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனார்.

Tags :
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து மது விற்பதா? கமல் கண்டனம்