×

பொன்னமராவதி பகுதி கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி, நவ.30: பொன்னமராவதி பகுதியில் உள்ள கோயில்களில் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை சுப்பிரமணியர் கோயில், அரசமலை வையாபுரி சுப்பிரமணியர் கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், வலையபட்டி மலையாண்டிகோயில், பொன்னமராவதி பாலமுருகன் கோயில் மேலைச்சிவபுரி சக்திவேலாயுதசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தூத்தூர் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வலையபட்டி மலையாண்டி கோயில், கண்டியாநத்தம், ஆலவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Tags : area temples ,Karthika ,Ponnamaravathi ,
× RELATED பிரதோஷ வழிபாடு