×

திருமயம் அருகே கே.புதுப்பட்டி காவல்நிலையத்தில் டிஐஜி ஆனிவிஜயா ஆய்வு

திருமயம், நவ.30: அரிமளம் அருகே கே.புதுப்பட்டி காவல்நிலையத்தில் டிஐஜி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள கே புதுப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா நேற்று வருடாந்திர ஆய்வு நடத்தினர். அப்போது அரிமளம், கே புதுப்பட்டி ஸ்டேஷனில் போலீசாரின் ரெக்கார்டுகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடையே போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக மாஸ்க், மரக்கன்றுகள் வழங்கியதோடு அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கினார். மேலும் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் எஸ்பி கீதா, பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமல கண்ணன், கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் பார்வதி மற்றும் பலர் உடன்இருந்தனர்.

Tags : DIG Anivijaya ,police station ,K. Pudupatti ,Thirumayam ,
× RELATED டிஐஜி ஆனிவிஜயா பங்கேற்பு 10 பேர் டிஸ்சார்ஜ்