×

அதிகாரிகளின் அலட்சியத்தால் காயார் கிராமத்தில் தொடர் மின் அழுத்தம்: மின்சாதன பொருட்கள் சேதம்; மக்கள் கடும் வேதனை

திருப்போரூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால், காயார் கிராமத்தில் தொடர் மின் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், வீடுகளில் பயன்படுத்தும் மி ன்சாதன பொருட்கள் சேதமடைகின்றனர். பொதுமக்கள் மக்கள் கடும் வேதனையடைகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியம் காயார் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் விவசாயிகள் நிறைந்துள்ள இங்கு, தற்போது புதிய வீட்டு மனைப்பிரிவுகள், தொழில் நிறுவனங்கள் வரத்துவங்கியுள்ளன. இங்கு, மாம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.

காயார் பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக கிராமத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் பெரிய மின் விளக்குகள் எரிவதிலும், மிக்சி, கிரைண்டர், ஏசி, பிரிட்ஜ் ஆகிய மின்சாதன பொருட்கள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சமீபத்தில், காயார் கிராமத்தில் உள்ள தனியார் வீட்டு மனைப்பிரிவுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தனி மின் மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டு, மின்சார கேபிள்களும் புதியதாக மாற்றப்பட்டன. ஆனால், வீடுகள், குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் புதிய மின் மாற்றிகள் அமைக்கவில்லை.

மேலும், 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின் கேபிள்களே இன்றும் பயன்பாட்டில் உள்ளன. இதனால், சீரான மின்சாரம் கிடைக்காமல் குறைந்த மின் அழுத்த கோளாறு நீடிப்பதுடன், மின்சாதன பொருட்களும் பழுதாகி நாசமாகின்றன. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. குறிப்பாக சந்திப்பாட்டை தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால், அரிசி ஆலைகள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டபோதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, காயார் கிராமத்தில்  நிலவும் குறைந்த மின் அழுத்த கோளாறை மாம்பாக்கம் மின் வாரிய நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags : village ,Kayar ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...