×

பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு 1 முழம் மல்லி ரூ.100க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்ததால் விலை மூன்று மடங்கு உயர்ந்து ஒரு முழம் மல்லிகை ரூ.100 வரை விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிவர் புயலால் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் தோட்டக்கலை பயிர் செய்து வந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகளான ஊத்துக்காடு, சிறுவாக்கம், புரிசை மட்டுமல்லாது, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து மலர்கள் விற்னைக்கு வரும். ஆனால் கடந்த 3 நாட்களாக நிலத்தில் நீர் வற்றாததால் காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்தது. இதனால் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டில் 1 முழம் மல்லிகை பூ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று திருக்கார்த்திகை தீபம் என்பதால் பூ மார்க்கெட்டில் மல்லி விலை கிலோ ரூ.1,500க்கும், கனகாம்பரம் ரூ.1,000ம், சாமந்தி ரூ.250க்கும் விற்பனையானதால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

* திருவண்ணாமலைக்கு செல்ல போலீஸ் தடை
திருவண்ணாமலை மாவட்டத்தினை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளதால் காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை நகர் முழுதும் பேனர்கள் வைத்து மாவட்ட எல்லையான அப்துல்லாபுரத்தில் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...