×

வாகன விபத்தில் டிரைவர் பலி

புழல்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பள்ளிக்கூட மேட்டுத்தெருவை சேர்ந்தவர் இனியவன்(40). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை கோணிமேடு சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : car crash ,
× RELATED லாரி டிரைவர் மர்மச்சாவு.