×

கார்த்திகை தீபவிழாவையொட்டி எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகாதீபம்

பெரம்பலூர்,நவ.30: பெரம்ப லூர் மாவட்ட திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீபத்தையொட்டி 1008மீட்டர் திரிமூலம் 5அடி உயர செம்பு கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்திருநாள் நேற்று தமிழக மெங்கிலும் கொண்டாடப்பட்டது. இத னையொட்டி திருவண்ணாமலையில் மாகாதீபம் ஏற்ப டுவதைபோல, பெரம்பலூர் மாவட்டத்தின் திருவண்ணாமலை எனப்படும், எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நேற்று மாலை 38ம் ஆண்டாக நடைபெறும் திருக்கார்த்திகை மகாதீப திரு விழாவை முன்னிட்டு, பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிக ள் அருளாசிபெற்ற தவயோகி சுந்தரமகாலிங்கம், தவயோகி தவசிநாதன் ஆகி யோரது ஏற்பாட்டில், எளம்பலூர் அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் திருக்கோயில், பிரம்மரிஷி மலையில் திருகார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்றப்படுவதை யொட்டி நேற்றுக் காலை 7 மணிக்கு திருவருட்பா பா ராயணம், கோபூஜை, அஸ்வ பூஜைகள், 210 சித்தர்கள் யாக பூஜை ஆகியன சிவ னடியார்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. காலை 10மணிக்கு தீபக் கொப்ப ரை பெரம்பலூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து டிராக்டர்மீது வைத்து எளம்பலூர்  காகன்னை ஈஸ்வரர் திருக்கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தபிறகு, தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன் மற்றும் சிவனடியார்கள் துணையுடன் மலைஉச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மாலை 6மணிக்கு, 1008 மீட்டர் திரியை கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது.

இதற் காக செம்புக் கொப்பரை யில், பசுநெய், இலுப்பை நெய், செக்கில் ஆட்டிய நல் லெண்ணை என 1008லிட் டர் நெய்யைக் கொண்டு, 108 கிலோ கற்பூரத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டது. ரோஹினி மாதாஜி, ராதா மாதாஜி ஆகியோர் முன்னிலையில் நடந்த பூஜைகளில் பெரம்பலூர் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் செந்தில்பாண்டியன், திட்டக்குடி சிவாலய வழிபாட்டு சங்க மாநிலத் தலைவர் சிவ ராஜசேகர சுவாமிகள், சிவசேனா மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பாவை சசிக்குமார், திருச்சி மண்டலத் தலைவர் பரஞ்சோதி, நகர துணைச் செயலாளர் குணசேகரன், திட்டக்குடி தொழிலதிபர் பி.டி.ராஜன், பெரம்பலூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் சுந்தர்ராஜன், சிவமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

Tags : Mahadeepam ,hill ,festival ,Karthika ,occasion ,
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்