×

பெரம்பலூரில் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி முகாம்

பெரம்பலூர், நவ.30: பெரம்பலூரில் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் வேளா ண்மை தொழில் நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மா னாவாரி ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து 2 நாள் பயிற்சிமுகாம் நடந்தது.
பெரம்பலூரில் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானாவாரி ஒருங்கி ணைந்த பண்ணையம் குறித்து 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது. பெரம்பலூர் மா வட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் கருணாநிதி தலைமை வகித்து பயி ற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: விவசாய ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதால் ஆண்டு முழுவதும் குறிப்பாக, விவசாயிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்ந்து வருமா னம் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும். பண்ணைக் கழிவுகளை சுழற்சி செய்வ தால் மகசூல் அதிகரிக்கும் என்றார்.  ஆலோசகர் பாலகிருஷ்ணன் திட்டத்தின் நன்மைகள் குறித்தும், வேளாண் அலுவலர் கருணா நிதிதிட்ட செயல்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினர்.

வேளாண் அறிவியல் மையத் தலைவர் நேதாஜி மாரியப்பன் மானாவாரிப் பயிர்களுக்கான நீர் மேலாண்மை குறித்தும், தொழில் நுட்ப வல்லுநர் புனிதவதி மண்புழு உரம் தயாரித்தல் முறை குறித்தும், கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் ஜோதிலெட்சுமி மற்றும் உ தவிப் பேராசிரியர் இளைய பாரதிஆகியோர் கால்நடை வகைகள், அதன் குணங்கள், தீவன வகைகள், அதனை அளிக்கும் முறைகள் குறித்தும், வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உரம், உரத்கட்டுப்பாடு குறித்தும் விளக்கிப் பேசினர். மேலும் உற்பத்தி அலுவலர் கருணாநிதி, வேளாண்மை அலுவலர் சவுமியா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் தேசிய நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் 2020-2021ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 100 பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண் உதவி இயக்குநர் ராணி வரவேற்றார். முடிவில் வேளாண் மை அலுவலர் பிரேமாவதி நன்றி கூறினார்.

Tags : Rainfed Integrated Farm Training Camp ,Perambalur ,
× RELATED மனிதநேய மக்கள் கட்சி முடிவு...