×

ஆன்லைனில் ரம்மி விளையாடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

பெரம்பலூர், நவ.30: பெரம்பலூர் மாவட்டஎஸ்பி நிஷா பார் த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி வி ளையாட்டுகள் தடைசெய் யப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கிணங்க 1930-ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டசட்டம், 1888ம் ஆண்டு சென்னை நகர காவல் சட்டம் மற்றும் 1859ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றிற்கு உரிய திருத்தங்கள் செய்து ஒரு அவசரச்சட்டம் பிற ப்பிக்கப்பட்டு கடந்த 21ம்தேதி அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டு உடனே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.எனவே பெரம்பலூர் மாவட் டத்தில் இனிவரும் காலங்களில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுவோரும், விளையாட்டை நடத்துவோரும் மேற்குறிப்பிட்ட அ வசரச் சட்டப்படி உரிய அப ராதத்திற்கும், சிறை தண்டனைக்கும் ஆளாக்கப்படுவதோடு, இவ்விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் கணினிகளும் மற்ற கருவிகளும் பறிமுதல் செய்யப்படும்.

இது தொடர்பான இணையவழி பணபரிமாற்றங்கள் தடுக்கப்படும். இந்த விளையாட் டை நடத்தும் நிறுவனங்களின்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அர சுமூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளபப் பட்டுள்ளது. இவ்விளையா ட்டின் தாக்கத்தினை உணர்ந்து ஆன்லைன் ரம்மி போ ன்ற பணம்வைத்து விளை யாடும் இணையவழி விளையாட்டுகளில் பெரம்ப லூர் மாவட்ட இளைஞர்கள், பொதுமக்கள் ஈடுபடவேண்டாமென பொதுமக்கள் இதன் மூலம் கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள் என பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் வெளியிட் டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சட்ட விரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை