×

வைத்தீஸ்வரன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு

சீர்காழி, நவ. 30: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தையல் நாயகி அம்பாள் வைத்தியநாத சுவாமி உடனாகிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் கார்த்திகை மாத தீப கார்த்திகை முன்னிட்டு கார்த்திகை மண்டபத்தில் செல்வமுத்து குமாரசாமி எழுந்தருளினார். பின்பு தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு தங்க ரதத்தில் செல்வமுத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைை கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Karthika Deepa ,Vaitheeswaran Temple ,
× RELATED பிரதோஷ வழிபாடு