×

மயிலாடுதுறை பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தந்தால் சன்மானம்

மயிலாடுதுறை, நவ.30: மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் அருகில் கஞ்சா விற்பனைக்கு பெயர் போனது. அங்கே விற்கப்படும் கஞ்சாவை பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் வாங்கி உபயோகப்படுத்தி வந்தனர். அந்தப்பழக்கம் பள்ளி மாணவர்களையும் தொற்றிக்கொண்டது. நாளடைவில் மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை என்பது ஒழிக்க முடியாத ஒன்றாகி வந்தது. அங்கே வியாபாரம் செய்துவந்த நபரை அடிக்கடி போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தாலும் குடும்பத்தினர் அந்த விற்பனையை மேற்கொண்டு வந்ததால் குடும்பத்தினரையும் காவலில் அடைத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் எங்கே கஞ்சா விற்பனை செய்யப்பட்டாலும் அவர்கள் கையை காட்டுவது மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் ஏரியாதான். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த புதிய எஸ்பி நாதா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இருந்தாலும் விற்பனையாகி வந்ததன் மீது தனிக்கவனம் செலுத்தி அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய வந்த புதிய நபர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். கஞ்சா விற்பனை செய்துவந்த இடத்தில் மயிலாடுதுறை போலீசார் ஒரு விளம்பர போர்டை வைத்து எச்சரித்துள்ளனர்.

அந்த போர்டில் எழுதப்பட்ட வாசகம், மயிலாடுதுறை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தல் மற்றும் வைத்தருத்தல் போன்ற செயல்பாடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரேனும் கஞ்சா மற்றும் அது சம்பந்தமான போதை பொருட்கள் விற்பனையோ, வைத்திருந்தாலோ தகவல் தெரிந்தால் உடனே தொலை பேசி எண்ணுக்கு தகவல் தருமாறு மயிலாடுதுறை காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலை பேசி எண்கள். காவல்ஆய்வாளர் 9443855155, உதவி ஆய்வாளர் 9498140020, காவல்நிலையம் 04564222450 - மயிலாடுதுறை காவல்நிலையம். என அந்த போர்டில் அறிவிக்கப்பட்டுள்ளது, இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஒருபக்கம் நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட பகுதி என்பதால் வருத்தமும் அடைகின்றனர்.

Tags : area ,Mayiladuthurai ,
× RELATED கஞ்சா விற்க முயன்றவர் மீது வழக்கு அரை கிலோ பறிமுதல்