×

விஸ்வநாதநகர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம்

பேட்டை, நவ.30: நெல்லை பேட்டை விஸ்வநாதநகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொருளாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சுந்தரம், செயலாளராக ரவிச்சந்திரன், பொருளாளராக சிவசுப்பிரமணியன், துணைத்தலைவராக பாலமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் விஸ்வநாதநகர் பூங்காவில் மூலிகை செடிகள் அமைத்து தந்த மாநகராட்சி ஆணையாளர் கண்ணனுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நகருக்கு அடிப்படை வசதியாக தெருவுக்கு ஒரு பொதுகுடிநீர் குழாய் அமைத்து தரவும், தெருவிளக்குகள், சாலை வசதிகள் அமைத்து தரவும் மாநகராட்சிக்கு கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

Tags : Viswanathanagar Residents Union Meeting ,