×

ராஜா குடியிருப்பு தெருக்களில் தண்ணீர் தேக்கம்

நெல்ைல, நவ.30: பாளை மூளிக்குளம் வாய்க்கால் அடைப்பு காரணமாக ராஜா குடியிருப்பு தெருக்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.
பாளை மூளிக்குளம், ராஜா குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மூளிக்குளம் வாய்க்கால் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக அடைப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தண்ணீர் ராஜா குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு செல்கிறது. பொதுமக்கள் தெருக்களில் தண்ணீருக்கு மத்தியில் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. தண்ணீரை வடிய வைக்கவும் முயற்சிகள் இல்லை. எனவே ராஜா குடியிருப்பில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Raja ,streets ,
× RELATED தொடர் மழையால் வயல்களில் தண்ணீர்...