×

பாளை கோயிலில் ஐயப்பன் சிலை மாயம்

நெல்லை, நவ.30: பாளை மூளிகுளத்தில் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன் ஐயப்பன் சிலை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை  மூளிகுளம் பகுதியில் பேராச்சி செல்வியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக்  கோயிலில் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு மாலையணிந்து விரதம் இருந்து  வணங்குவதற்காக ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன் ஐயப்பன் சிலை வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் விரதம் இருக்கும் சமயங்களில் மாலையணிவித்து பூஜை நடத்தும்  சமயங்களில் மட்டும் சுவாமி சிலையை வெளியே எடுப்பர். அதன்பின்னர் பெட்டியில் வைத்து பூட்டி  விடுவர். நேற்று திருக்கார்த்திகையை முன்னிட்டு பூஜை செய்வதற்காக, ஐயப்பன் சிலையை  வெளியே எடுப்பதற்காக படப்பக்குறிச்சியைச் சேர்ந்த பூசாரி நவநீதகிருஷ்ணன்  பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது சுவாமி சிலை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஊர்த்தலைவர் ஜெயபாலிடம் தகவல்  தெரிவித்தார். அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில்  புகார் அளித்தார். இதைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ஐயப்பன் சிலையை தேடி  வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags : Palai ,temple ,
× RELATED ஐயப்பன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை