×

நெல்லை அருகே நில தகராறில் 3 பேர் கைது

நெல்லை, நவ. 30: நெல்லை அருகே நில தகராறில் வாலிபர் காயமடைந்தார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். கங்கைகொண்டான் அருகேயுள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தினர். இதற்கு கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூரை சேர்ந்த இலோசியஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இலோசியசுக்கும், பழனி, அலெக்சாண்டர் உள்ளிட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இலோசியஸ் சகோதரர் ஆரோக்கியம் (38) காயம் அடைந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசில் ஆரோக்கியம் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார், ஆலடிப்பட்டியை சேர்ந்த பழனி, சாலமோன், அலெக்சாண்டர், தானியேல், ஜேம்ஸ், செல்வின், ஜெயகுமார் ஆகிய 7 பேர் மீது வேலியை சேதப்படுத்தியது, மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தானியேல், செல்வின், ஜெயக்குமார் ஆகியோர் கைது ெசய்யப்பட்டனர்.

Tags : Nellai ,
× RELATED இடத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து பைனான்சியர் கைது