×

மத்திய சுற்றுலாத்துறை சார்பில் இணையதளம் ஹோட்டல்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சேலம், நவ.30:மத்திய சுற்றுலாத்துறையின் இணையதளத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய சுற்றுலாத்துறை சார்பில் இந்திய அளவில் அனைத்து தங்கும் விடுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், www.nidhi.nic.in என்ற புதிய இணையதளம்  தொடங்கப்பட்டுள்ளது. இதில், விடுதியினை பற்றி கேட்கும் விவரங்களை பதிவேற்றம் செய்தால், விடுதிக்கான பதிவேற்ற எண் வழங்கப்படும். மேலும், இந்த இணையதளத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளை பதிவு செய்து, சுய பங்கேற்பு சான்றிதழ், சுயமதிப்பீட்டு சான்றிதழ் ஆகிய மின்னணு சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

இது தவிர கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு பயிற்சி தரும் வகையில் www.saathi.qcin.org என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதிகள், இந்த இணையதளத்தில் பதிவு செய்து தரம் மற்றும் வணிக மேம்பாடு உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று பயன்பெறலாம். மேலும், பதிவுபெற்ற எண் மூலம், தங்களது விடுதி பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான சுயசான்றிதழைப் பெறலாம். இந்த இரு இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம் மற்றும் சுயசான்றிதழை, சேலம் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தின் மெயிலுக்கு (touristofficeslm@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு, சேலம் சுற்றுலா அலுவலகத்தை 0427-2416449 மற்றும் 89398 96397 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : hotels ,Federal Department of Tourism Instruction ,
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்