×

வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.30:சூளகிரியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயலட்சுமி, தமிழரசு, வேடி, சுகேந்திரன், கலைவாணன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். சேகர் வரவேற்றார். சின்னசாமி வரவு-செலவு கணக்கு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஜமாபந்தி படி வழங்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தியும், 10 ஆண்டு என்பதை 6 ஆண்டாக குறைத்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 2ம் தேதி, கோட்டாட்சியரை சந்தித்து மனு அளிப்பது. 9ம் தேதி கலெக்டரிடம் மனு அளிப்பது. 17ம் தேதி தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. அதை தொடர்ந்து, 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அனைத்து ஊழியர்களும், கோரிக்கை அட்டை அணிந்து கொண்டு பணியாற்றுவது, 30ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் விடுப்பு எடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மாவட்டத்தில் 3 இடங்களில் 61 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி