×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, நவ.30: பேரிகை போலீஸ் எஸ்ஐ பாஞ்சாலி மற்றும் போலீசார், அத்திமுகம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்குள்ள ஒரு பெட்டி கடையில் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடையின் உரிமையாளரான வினய்தேஜா(21) என்பவரை கைது செய்தனர். இதேபோல், தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ ஞானகண்ரகுநாதன் மற்றும் போலீசார், போகசந்திரம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தாசப்பா(68) என்பவர் விற்பனைக்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED கஞ்சா விற்பனை 2 பேர் கைது