×

தேன்கனிக்கோட்டை அருகே 20 லட்சத்தில் சாலை அமைக்க பூமிபூஜை

தேன்கனிக்கோட்டை, நவ.30: தேன்கனிக்கோட்டை அருகே மல்லசந்திரம் ஊராட்சி அடைகலாபுரம் முதல் சாமிபுரம் வரை 20 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகளை, தளி பிரகாஷ் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், ஊராட்சி தலைவர்கள் சுரேகா முனிராஜ், துரைசாமி, ஒன்றிய அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஸ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர் திம்மராயப்பா, ஊர்கவுண்டர் ஜோசப், ஜெயராம்ரெட்டி, துணை தலைவர் கிரிஸ், இளைஞரணி துணை அமைப்பாளர், வேணு, மல்லிகார்ஜூனா முனிராஜ், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : road ,Dhenkanikottai ,
× RELATED கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை