×

கார்த்திகை தீபத்தையொட்டி கோயில்களில்

மகா பரணி தீபம்தர்மபுரி, நவ.30: கார்த்திகை தீபத்திருவழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன் கோயிகளில் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்பட்டது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலையில் மகா தீபம் ஏற்றபட்டது. இதை தொடர்ந்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி கோயிலில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து  திருவீதி உலா நடந்தது.

இதுபோல் நெசவாளர் நகர், அன்னசாகரம், கடைவிதி மற்றும் நகரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பிரசித்த பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும், வீடுகள்தோறும் பெண்கள் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர பிரசாதம் விரைவு தபால் மூலம், முன்பதிவு செய்த பக்தர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 88836-68199 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : temples ,Karthika ,
× RELATED கோயில்களுக்கு இலவச மின்சாரம்