×

மாரண்டஅள்ளி அருகே டூவீலர் மீது வாகனம் மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலி

தர்மபுரி, நவ.30:மாரண்டஅள்ளி அருகே டூவீலர் மற்றும் சரக்கு வாகனம் மோதியதில் 2 பேர் இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (50). விவசாயி. இவரது மகன் சுரேஷ் (28). இவர் மாரண்டஅள்ளி கொலாசன அள்ளியில் செயல்படும் தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுரேசுக்கு பெண் பார்க்க நேற்று மாரண்டஅள்ளி அருகே பெல்ரம்பட்டி பகுதிக்கு, டூவீலரில் சென்றுள்ளனர். சுரேஷ் ஓட்டிச் சென்ற டூவீலரில், அவரது தந்தை முருகன், வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த திருமண தரகர் மாரிமுத்து (55) ஆகியோரும் சென்றனர். பெண் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்த பின்னர், வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கோட்டூர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, பாலக்கோட்டில் இருந்து பெல்ரம்பட்டி நோக்கி வந்த சிறிய சரக்கு வாகனம், சுரேஷ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது.

இந்த விபத்தில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மாரிமுத்து, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சுரேஷ் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மது விற்ற 8 பேர் கைது: அரூர் சப் டிவிஷனில் மதுவிக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த முத்தானூர் தங்கராஜ் (60), அரூர் அன்பழகன் (55), குமார் (40), பி.பள்ளிப்பட்டி சக்கு (45), காரிமங்கலம் சங்கர் (40), புதுப்பட்டி வசந்தா (45), சாளா (57), கொக்கராப்பட்டி கலா (40) உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

Tags : persons ,Marandahalli ,
× RELATED வாகனம் மோதி வாலிபர் பலி