×

கடத்தூர் பகுதியில் சோளம் விளைச்சல் பாதிப்பு

கடத்தூர்: கடத்தூரில், மை பூச்சு நோய் தாக்குதலில், ேசாளம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர், வேப்பிலைபட்டி, தென்கரைக்கோட்டை, சிந்தல்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பாண்டு அதிகளவில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், நல்ல விளைச்சல் கண்டு வருகிறது. ஆனால், ஒரு சில இடங்களில் சோளத்தில் மை போன்ற பூச்சி தாக்குதல் நோய் உருவானதால், தீயில் எரிந்து பட்டுபோனது போன்ற நிலையில் சோளப்பயிர் காணப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சோளத்தில் மை போன்ற பூச்சி தாக்குதல் நோயால் பயிர்கள் கருத்துள்ளது. இதனால் ஏக்கருக்கு ₹15 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றனர். 

Tags : Kadatur ,area ,
× RELATED கடத்தூர் அருகே இருதரப்பு மோதல்